அரச வங்கியில் காசாளரை ஏமாற்றி ஐந்து இலட்சம் சுருட்டிய வெளிநாட்டவர் தப்பியோட்டம்!!

617

bank

வெளிநாட்டுப் பிரஜைகள் இரண்டு பேர் அரச வங்கியொன்றில் ஐந்து லட்சம் ரூபாவை சுருட்டிக் கொண்டு நாட்டை விட்டுத்தப்பியோடி உள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

கொழும்பு-07 டொரிங்க்டனில் உள்ள அரச வங்கியொன்றின் கிளைக்கு நேற்று வருகை தந்த வெளிநாட்டவர் இரண்டு பேர் அங்கிருந்த காசாளரை தந்திரமாக ஏமாற்றி ஐந்து லட்சம் ரூபாவை சுருட்டிக் கொண்டு லாவமாக நழுவியுள்ளனர்.

நேற்று மாலை குறித்த காசாளர் வங்கி அலுவல்களை முடித்து நாளாந்த கணக்கு வழக்கை ஒப்படைக்க முற்பட்டபோதுதான் தான் லாவகமாக ஏமாற்றப்பட்டு ஐந்து லட்சம் ரூபா பணத்தை பறிகொடுத்திருப்பதை உணர்ந்துள்ளார்.

இதனையடுத்து பொலிசாரின் அவசர உதவி நாடப்பட்டு, விமான நிலையத்தில் வைத்து குறித்த வெளிநாட்டுப் பிரஜைகளை மடக்கும் நோக்கில் பொலிசார் விரைந்துள்ளனர்.

எனினும் அவர்கள் இருவரும் அதற்கு முன்னரே விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டும் வெளியேறியிருப்பதாக அறியக் கிடைத்துள்ளது.