வவுனியாவில் கஞ்சா செடிகள் மீட்பு : பொலிசார் அதிரடி நடவடிக்கை!!

574

 
வவுனியா உக்குளாங்குளத்தில் வீடு ஒன்றிலிருந்து கஞ்சா செடிகளை நேற்று (28.05.2016) மாலை 4.30 மணியளவில் வவுனியா பொலிசார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

கடந்த சில வாரங்களாக வவுனியா உக்குளாங்குளத்தில் மாடுகள் காணாமல் போயிருந்தன. இதனையடுத்து பிரதேச மக்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.
பிரதேச மக்கள் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மாட்டுத் திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபரை விசாரணை செய்த பொலிசார். சந்தேகத்தின் பெயரில் சந்தேக நபரின் வீட்டை பரீசோதனை மேற்கொண்டனர்.

இதன் போது வீட்டின் அறையிலிருந்து 4-6 அடி உயரமுடைய இரு கஞ்சா செடிகளை பொலிசார் கைப்பற்றினர்.

இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3 4