2 1/2 வயது ஆண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 17 வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கல்பிடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையே குற்றத்தை இழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், சிறுவன் வைத்தியப் பரிசோதனைகளுக்காக கல்பிடி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்பிடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






