வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று (29.05.2016) மதியம் 1.00 மணியளவில் வான் ஒன்று விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவிலிருந்து ஒமந்தை நோக்கி பயணித்த வான் இன்று மதியம் 1.00 மணியளவில் நொச்சிமோட்டை பாலத்தை கடக்க முற்ப்பட்ட வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்ப்படவில்லை
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.









