திருமணத்துக்கு பின் சினேகா, பிரசன்னா மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்!!

900

sneha

சினேகாவும், பிரசன்னாவும் திருமணத்துக்கு பிறகு மீண்டும் புதுப்படமொன்றில் ஜோடியாக நடிக்கின்றனர். ஏற்கனவே இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போதுதான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இருவரும் மீண்டும் ஜோடியாக நடிக்க கதை கேட்டு வந்தார்கள். இந்த நிலையில் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய இயக்குனர் வைத்தியநாதன் சொன்ன கதை பிடித்துப்போய், தற்போது அவர் இயக்கும் புதுப்படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இதுகுறித்து சினேகா கூறும்போது, அருண் வைத்தியநாதன் படத்தில் இருவரும் சேர்ந்து நடிப்பது குறித்து பேசி வருகிறோம். ஓரிரு வாரத்தில் முடிவாகிவிடும் என்றார்.