அவுஸ்திரேலியாவை வீழ்த்தி முத்தரப்பு கிண்ணத்தை வென்றது இந்திய அணி!!

306

india

அவுஸ்திரேலிய A அணிக்கெதிரான இறுதிச் சுற்றில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய A அணி முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி சம்பியன் பட்டம் வென்றது.

தென்ஆபிரிக்கா சென்ற இந்திய A அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்றது. மூன்றாவது அணியாக அவுஸ்திரேலிய A அணி விளையாடியது.

லீக் சுற்றில் அசத்திய இந்தியா (2 வெற்றி), அவுஸ்திரேலியா (3 வெற்றி) அணிகள் பிரிட்டோரியாவில் இறுதிச்சுற்றில் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் புஜாரா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்கள் எடுத்தது.

அரைசதம் கடந்து ஷிகர் தவான் 62 ஓட்டங்களும், கார்த்திக் 73 ஓட்டங்களும் எடுத்தனர். சுரேஷ் ரெய்னா 17 ஓட்டங்களும், அம்பதி ராயுடு 34 ஓட்டங்களும், விரிதிமன் சகா 31 ஓட்டங்களும் எடுத்தனர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய அவுஸ்திரேலிய அணி 46.3 ஓவரில் 193 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

அணித்தலைவர் ஆரோன் பின்ச், ஹென்ரிக்ஸ் தலா 20 ஓட்டங்களும், டிம் பெய்ன் 47 ஓட்டங்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் நதீம் 3 விக்கெட்டும், முகமது சமி 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இளம் இந்திய அணி முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி கிண்ணத்தை வென்றது.