வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிவரும் 16-09-2013 அன்று நடைபெறவுள்ளது.
சிலவருடங்களாக இடம்பெற்றுவந்த ஆலாய புனருத்தான வேலைகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில் கும்பாபிஷேக நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் இமாதம் 30ம் திகதி (30-08-2013) அன்று ஆரம்பமாகவுள்ளது.
முக்கிய கிரியைகள் விபரம்:
யந்திர பூசை : 30-08-1013 வெள்ளிக்கிழமை கலை 9 மணி.
கர்மாரம்பம் : 11-09-2013 புதன்கிழமை கலை 8 மணி.
யாகாரம்பம் : 14-09-2013 சனிக்கிழமை மாலை 5 மணி.
பிம்பஸ்தாபனம் : 14-09-2013 சனிக்கிழமை இரவு 9.30 தொடக்கம் 11 மணி வரை.
எண்ணைக்காப்பு : 15-09-2013 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை.
கும்பாபிஷேகம் : 16-09-2013 திங்கட்கிழமை காலை 5.45 மணி தொடக்கம் 6.30 மணி வரை.
இவ் உற்சவங்கள் அனைத்தும் சிவஸ்ரீ முத்துஜெயந்திநாதக்குருக்கள் தலைமையில் நடைபெறும்.






