இலங்கையில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றம் கல்விக்கான நிதியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய தெளிவின்மை, பொருளாதார நிலைமைகள் போன்றவற்றால் இவ்வாறு சிறுவர் திருமணங்கள் அதிகரித்த நிலையில் காணப்படுவதாக, அதன் இலங்கைக்கான பிரதிநிதி ரீசா ஹொசைனி தெரிவித்துள்ளார்.
சிறுவயதில் திருமணம் முடித்த 71 பேர் மத்தியில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களில் 30 சதவீதமானவர்கள், 18 வயதுக்கு முன்னதாகவே கருத்தரித்திருந்தமை தெரியவந்துள்ளது.
இவ்வாறான சிறுவர் திருமணங்களால், மன உளைச்சல், சுகாதார சீர்கேடுகள், சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பதுடன், அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் ஏனைய வன்முறைகளும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து நாட்டு மக்களுக்கு போதிய தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





