“வளமான எதிர்காலத்திற்கான இளைஞர்களின் சக்தி” என்னும் தொனிப்பொருளில் நடைபவனி ஒன்று வவுனியாவில் இன்று(31.05.2016) இடம்பெற்றது.
பவனி வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இவ்வாண்டு தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு வளமான எதிர்காலத்திற்கு இளைஞர்களின் சக்தி என்னும் தொனிப்பொருளில் பவனி நடைபெற்றது.
வவுனியா தபால் நிலையம் முன்பாக ஆரம்பித்த நடைபவனி நகரம் ஊடாக கண்டி வீதி வழியாக சென்று தேசிய இந்து இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னால் நிறைவடைந்தது.
இதில், வடமாகாண சபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராசா, தர்மபால செனவிரட்ன மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






































