உலகைக் கலக்கும் 10 வயதுப் பெண் நிருபர்!!

338

 
பாலஸ்தீனத்தை சேர்ந்த ஜான்னா ஜிஹாத் என்ற 10 வயது சிறுமி இளம் நிருபராக உலகையே கலக்கி வருகிறார்.

தான் செய்யும் பணியாலும், பேசும் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்துவிடும் இச்சிறுமி தனது நாட்டில் நடக்கும் தீவிரவாதிகள் மற்றும் இராணுவத்தினரின் கொடுமைகளை உலகுக்கு எடுத்துக்காட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இஸ்ரேலில் உள்ள நபி சலே என்ற கிராமத்தை சேர்ந்த இச்சிறுமி, மிகவும் இளம் வயதிலேயே போர் கொடூரங்களை கண்டு துவண்டுபோயிருக்கிறாள்.

தன்னை விட சிறியவனான தனது தோழனை இஸ்ரேல் இராணுவம் தன் கண்முன்னே சுட்டுக்கொன்றதை நேரில் பார்த்த அச்சிறுமியின் மனதுக்குள் தான் நிருபராக வேண்டும் என்று கனவு மொட்டுவிட ஆரம்பித்துள்ளது.

தான் தங்கியிருக்கும் இருப்பிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இராணுவத்தினராலும், தீவிரவாதிகளாலும் நடக்கும் அக்கிரமங்களை பார்த்து நிலைகுலைந்து போனார்.

இதனால், தன்னுடைய எண்ணங்கள் அனைத்தையும் ஒவ்வொரு நாள் இரவிலும் எழுதி வைக்க ஆரம்பித்தாள், தன்னுடைய உறவினர்கள் இருவர் கொலை செய்யப்பட்டது, மேலும் சில அக்கிரமங்கள் போன்றவற்றை எழுதிவைத்துக்கொண்டே வந்த இவர், நாளடைவில் தனது ஐபோனை வைத்து அதனை படம்பிடிக்க ஆரம்பித்தாள்.

7 வயதில் நிருபராக அவதாரம் எடுத்த இச்சிறுமி, தான் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சர்வதேசஅமைதிப் போராட்டக்காரர்கள், பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்து விடுகிறார்.

இச்சிறுமி குறித்து அவரது தாயார் கூறியதாவது, எனது மகள் குறித்து நான் பெருமைப்படுகிறேன், சிறு வயதிலேயே வன்முறையை எதிர்த்து போராடுகிறான் என்பது இந்த உலகத்துக்கு எவ்வளவு பெரிய பாடம் என கூறியுள்ளார்.

தனது நிருபர் பணிகுறித்து சிறுமி கூறியதாவது, கண்ணில் காண்பவற்றை எல்லாம் புகைப்படம் எடுக்கமாட்டேன், வன்முறை செயல்கள் எங்கு அத்துமீறி நடக்கின்றனவோ அதனைத்தான் உலகுக்கு அம்பலப்படுத்துவேன்,

தொலைக்காட்சி, யூடியுப், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தி தீவிரவாதிகள்மட்டும் இராணுவத்தினரின் குற்றங்களை வெளிச்சம்போட்டு காட்டுகிறேன், நான் செய்யும் பணிமிகவும் ஆபத்தானது, பலமுறை எனது வீடு இராணுவ வீரர்களின் கண்ணீர்புகை குண்டுகளுக்கு ஆளாகியுள்ளது என கூறியுள்ளார்.

2014-ம் ஆண்டு உலகின் மிகச் சிறிய நிருபராக ஜான்னா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தன் அம்மாவுடன் ஜெருசலம், ஹெப்ரான், நப்லஸ், ஜோர்டான் பகுதிகளுக்கு பயணம் செய்து, அனுபவங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

1 2 3 4 6