வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியவர்கள் விளக்கமறியலில்!!

403

50f8e9503c40607fa3af5ddb20c717b4_L
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் உறவினர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி க.ஜீவராணி உத்தரவிட்டுள்ளார். ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு நேற்று விசாரனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதிபதி இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரனைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், வித்தியாவின் தாயாரை சந்தேகநபர்களின் உறவினர்கள் அச்சுறுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில வழக்கு தவனைகளின் போது வித்தியாவின் தாயார் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் இது தொடர்பாக தெரிவித்திருந்தார்.அதன்படி இது தொடர்பாக விசாரனை செய்யுமாறு ஊர்காவல்துறை பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.