150 கி.மீ வேகத்தில் சீனாவைத் தாக்கியது உடோர் புயல்..!

531

chinaதெற்கு சீனாவில் உள்ள கடலோர பகுதிகளை உடோர் புயல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேரை காணவில்லை. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மாவோமிங் நகரை உடோர் புயல் தாக்கியபோது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.5 பேரை காணவில்லை. புயல் தாக்குவதற்கு முன்பே 88,000 பேர் மாவோமிங் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தடுக்கப்பட்டது.

பலத்த மழையால் கியூகிவா நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஜான்ஜியாங்,உஜூவன் பகுதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக குவாங்ஜி நீர்வள பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஹூனன் மாகாணத்தில் வெள்ளநீர் ரயில் பாதையை சூழ்ந்ததால் பல இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த வாரம் இதே உடோர் புயல் பிலிப்பின்ஸைதாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்.