ராமேஸ்வரம் மீனவர்கள் எண்மர் விடுதலை..!

689

rameswaramஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இரண்டு படகுகளில் கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்திருந்தது.

இவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அனுராதபுரம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 மீனவர்களையும், மன்னார் மாவட்ட நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் விடுதலை செய்து உத்தரவிட்டார்.