டெஸ்டில் இருந்தும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு?

341

sachine200 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய பிறகு சச்சின் டெண்டுல்கர் என்ற சகாப்தம் டெஸ்ட் போட்டிகளில் முடிவுக்கு வரும் என்று முன்னாள் வீரர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் எல்லா சாதனைகளையும் படைத்து விட்டார். அடுத்ததாக அவர் 200-வது டெஸ்ட் மைல்கல்லை எட்டும் ஆவலில் இருப்பார் என்று உறுதியாக கூற முடியும்.

இந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் விளையாடும் போது அவர் 200-வது டெஸ்டில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

அதன் பிறகு அவர் டெஸ்டில் இருந்தும் ஓய்வு பெற்று விடுவார் என்று நினைக்கிறேன்.ஓய்வு பெற்றாலும் தெண்டுல்கர் கிரிக்கெட்டை விட்டு முழுமையாக ஒதுங்கக்கூடாது. எப்போதும் கிரிக்கெட்டுடன் தொடர்பு வைத்து கொண்டு ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு அளிக்க வேண்டும். அவரது சாதனைகளை ஏறக்குறைய யாராலும் முறியடிக்க முடியாது. 200 டெஸ்ட் போட்டி என்பதை நம்ப முடியவில்லை.

இவ்வாறு காவ்ரி கூறினார்.

40 வயதான தெண்டுல்கர் இதுவரை 198 டெஸ்டில் ஆடி இருப்பது குறிப்பிடத்தக்கது.