200 சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கொரூரனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

247

Briton-Richard-Huckle

மலேசியாவில் 200க்கும் அதிகமான குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிரித்தானிய நாட்டு குடிமகன் ஒருவருக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவில் உள்ள கெண்ட் நகரை சேர்ந்தவர் ரிச்சார்ட் ஹக்கல்(30). கிறித்துவ மதபோதகராகவும் ஒரு ஆங்கில ஆசிரியராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அவர் மலேசியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தலைநகரான கோலாலம்பூரில் தங்கிய ரிச்சார்ட் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

ஆனால், ஆசிரியர் என்ற போர்வையில் இவர் நடத்தி கொடூரமான செயல்கள் பிரித்தானிய பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கடந்த 2006ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 ஆண்டுகளாக ரிச்சார்ட் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.

குறிப்பாக 6 மாதக் குழந்தை முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்கள், சிறுமிகள் என 200க்கும் அதிகமான குழந்தைகளிடம் இவர் அத்துமீறி நடந்து வந்துள்ளார்.

மலேசியா நாடு மட்டுமின்றி, ரிச்சார்ட் இந்தியாவில் உள்ள குழந்தைகள் மறுவாழ்வு மையத்திற்கும் விஜயம் செய்துள்ளார். ஆனால், இங்குள்ள குழந்தைகளிடம் அவர் அத்துமீறி நடந்துக்கொண்டாரா என்பது தெரியவரவில்லை.

9 ஆண்டுகளாக எல்லை மீறி நடந்துவந்த ரிச்சார்ட்டின் காம லீலைகள் கடந்த 2014ம் ஆண்டில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது, குழந்தைகளிடம் ரிச்சார்ட் நடத்திய அத்துமீறல்களை அவரோ வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன் பின்னரே பொலிசாருக்கு ரிச்சார்ட்டின் உண்மை முகம் தெரியவந்தது. கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவில் இருந்து பிரித்தானியா திரும்பிய ரிச்சார்ட்டை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான இறுதி வாதம் நேற்று பிரித்தானிய நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது பேசிய நீதிபதி, பிரித்தானிய நீதிமன்ற வரலாற்றில் இவ்வளவு மோசமான பாலியல் குற்றங்களை செய்த ஒரு குற்றவாளியை இப்போது தான் சந்திக்கிறேன்.

இந்த சமுதாயத்திற்கு ரிச்சார்ட் ஒரு பயங்கரமான அச்சுறுத்தல். எனவே, குற்றவாளிக்கு பரோலில் வெளியே வர முடியாதளவிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன் என உத்தரவிட்டுள்ளார்.