சிதறியுள்ள ஆயுதங்கள் வெடிக்கலாம் : மக்களுக்கு எச்சரிக்கை!!

296

Gosgama

கொஸ்கம- சாலாவ இராணுவமுகாம் வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய பாதுகாப்பு தரப்பு மும்முனை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

விசேட இராணுவ நீதிமன்றம், குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நீதவான் விசாரணை என்பன தனித்தனியாக இடம்பெற்று வருகின்றன.

மேலும் தடைசெய்யப்பட்ட வலயமாக அடையாளப்படுத்ப்பட்டிருந்த பகுதி இப்போது 500 மீற்றர் அளவாக குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதியில் மக்கள் குடியமர முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பு இடம்பெற்ற நேரத்தில் 6 கிலோமீற்றர் பரப்பு தடைசெய்யப்பட்ட வலயமாக அடையாளப்படுதப்பட்டிருந்த நிலையிலேயே இப்போது அந்த பரப்பு 500 மீற்றர் அளவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த பகுதிக்குள் மக்கள் குடியமரமுடியாது எனவும் ஏனைய பகுதியில் மக்கள் குடியமர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகாமிலுள்ள ஆயுத களஞ்சியம் வெடிப்புக்கு உள்ளான போது வெடித்து சிதறிய ஆயுதங்கள் அனைத்தும் கிராமங்களில் விழுந்துள்ள நிலையில் அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டு வருகின்றது.

பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் சிதைவடைந்த ஆயுதங்களை கையில் எடுக்கவோ அல்லது வீடுகளில் வைத்திருக்கவோ வேண்டாம் என பாதுகாப்பு தரப்பு வலியுறுத்தியுள்ளது.

மேலும் சிதைவடைந்த ஆயுதங்களில் சில மேலும் வெடிக்கலாம் எனவும் ஆகவே வெடி பொருட்கள் இருக்கும் இடங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்குமாறும் உடனடியாக இராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்கும்படியும் குறிப்பிட்டுள்ளனர்.

-வீரகேசரி-