கலை இலக்கியத் துறைசார் செயற்றிடங்களை முன்னெத்துவரும், தமிழ் மாமன்றம், புதிய முயற்சியாக ஆற்றலுக்கும் ஆளுமைக்குமான களம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுத்த ‘விளை நிலம்’ எனும் நிகழ்வின் இரண்டாவது களம் கடந்த 05.06.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வவுனியா கமநல சேவைகள் திணைக்கள கேட்போர் கூடத்தில் மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றது.
ஒரு நிமிட மௌன வணக்கத்துடன், ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரையினை தமிழ் மாமன்றத்தின் உறுப்பினர் ச.கஜன் நிகழ்த்தினார். தொடர்ந்து நிகழ்வின் தொடக்கவுரையினை பண்டிதர் வீ.பிரதீபன் பிரதேச கலாசார உத்தியோகத்தர்-வவுனியா நிகழ்த்தினார்.
அவர் தனது உரையிலே இளைஞர்கள் இலக்கியத்துறையில் மேலும் தமது ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கூறியதோடு பல இலக்கியச் செயற்பாடுகளை சமுகத்தில் முன்னெடுக்கவேண்டி அவசியம் குறித்தும் தனது உரையிலே தொரிவித்ததோடு இலக்கிய செயற்பாடுகளிலே தனது பங்களிப்பு எப்போதுமே இருக்கும் எனவும் கூறினார்.
ஆற்றலகளை வளர்தெடுப்பதோடு, சமூக நலன் தொடர்பான விடங்கள் தொடர்பாகவும் சிந்தனையினை ஏற்படுத்தும் நோக்குடனும் ஆரம்பிக்கப்பட இந் நிகழ்வின் முதலாவது நிகழ்வாக ‘களிமண்’ என்ற நாடகம் கலைநிலாக் கலையகத்தினால் இடம்பெற்றது.
இன்றைய வன்முறைக்கு காரணமான சூழலை எவ்வாறு கையாளவேண்டும் மற்றும் பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்களிப்பு எவ்வாறு அவசியமானது போன்ற விடயங்களை கருப்பொருளாகக் கொண்டு மிகச் சிறப்பான நாடகத்தை வழங்கியிருந்தார்கள்.
நிகழ்வின் இரண்டாவது அம்சமாக சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கலந்தாலோசிக்கும் களமாக கருத்தாடற்களம் அமைந்திருந்தது “போருக்குப் பின்னரான தமிழரின் பொருளாதார மீள் எழுச்சியை தாமதப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுபவர்கள்” ‘தமிழ் அரசியற் தலைமைகளே’ என்னும் தலைப்பில் சி.துஷாரன், ந.ஜெனன், கி.கிஷாந் ஆகியோரும் ‘தென்னிலங்கை அரசியற் தலைமைகளே’ எனும் தலைப்பில் சி.கிருபானந்தகுமாரன், கி.நிக்ஷலன், சி.விதுர்சன் ஆகியோரும் கலந்துகொண்டு தமது கருததுக்களை ஆழமாகப் பதிவு செய்திருந்தனர்.
இக் கருத்தாடற் களத்தினை வைத்திய கலாநிதியும் தமிழ்மாமன்றத்தின் மேற்சபை உறுப்பினருமான செ.மதுரகன் அவர்களும் தமிழ்மாமன்றத்தின் மேற்சபை உறுப்பினருள் ஒருவரான இரா.இராஜேஸ்வரன் அவர்களும் நடுநிலைவகித்து சிறப்பித்தார்கள்.
தொடர்ந்து, தமிழ் மாமன்ற இணைச்செயலாளர் செல்வி.ஜெசிதா ஆனந்தமூர்த்தி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
இன் நிகழ்வில் தமிழ் மாமன்ற உறுப்பினர்கள், வவுனியாவை சேர்ந்த கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலை இலக்கிய துறைசார் ஆர்வலர்கள் என பலதரப்பட்ட பலரும் அவையை நிறைந்திருத்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கப்பட்டு, சரியான முறையில் நிகழ்வுகள் நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.
தொடச்சியாக விளை நிலம், பாடசாலை மாணவர்களையும், கலைஞர்களையும் உள்ளடக்கி, அடுத்த அடுத்த களங்களை காத்திரமான நிகழ்வுகளோடு அரங்கேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















