சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட முசலி பிரதேச சபை உதவித் தலைவர் உட்பட ஐவர் கைது!

1171

 
மன்னார் முருங்கள் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட சிலாவத்துறை முசலி பிரதேச சபை உதவி தலைவர் முகமட் பைரூஸ் என்பவர் உட்பட ஐவரை நேற்று காலை 7.00 மணிக்கு கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்டம் முருங்கன் மல்வத்து ஆற்றில் சட்டவிரோதமாக மண் அகழ்வு நடைபெறுவதாக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிசார் மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் உட்பட இரண்டு ரக்டர்கள், எட்டு மண் அள்ளும் சவல்(மண்வெட்டி) ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் தெரிவிக்கையில்..

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோன் அவர்களின் நெறிப்படுத்தலில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகளை சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட முசலி பிரதேச சபை உதவி தலைவர் தடுத்ததுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முற்பட்டதாகவும் அரசாங்க முத்திரை பதித்த கப் ரக வாகனத்தில் மண் அகழ்வோருக்கு பாதுகாப்பு வழங்கி வந்ததாகவும் தெரிவித்த பொலிசார் பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய அனைவரையும் கைது செய்து இன்று 07.06.2016 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

பேதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரி தர்மரெத்தின மற்றும் சிறிகுமார தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

1 5 6 8 9