கறிவேப்பிலை ஏன் முடிக்கு உகந்தது..?

466

Homemade-Curry-Leaf-Powder-That-Will-Prevent-Hair-Loss-and-Promotes-Hair-Regrowth-1

முடி உதிர்தல், பெரும்பாலானோருக்கு பெரும் கவலைகளுள் ஒன்றாகும். மோசமான உணவு பழக்கம், சுற்றுச்சூழல் மாசு மற்றும் தலை சீவுதலின் தன்மை போன்றவை இப்பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன. இதற்காக நம்மில் பலர், பல அதிக செலவில் மருந்துகள், மாத்திரைகள் மற்றும் எண்ணெய்களை நாடுகிறோம்.

விலை மதிப்பு மிக்க மருந்துகள் மற்றும் மாத்திரைகளை விட நம் சமையலறையிலெயே விலை மதிப்பில்லாத இயற்கையான தீர்வு இருக்கிறது. கறிவேப்பிலை தான் அந்த மதிப்பில்லா இயற்க்கை ரகசியம். சாதாரனமாக கரிவேப்பிலை உட்கொண்டால் நம் தலை முடிக்கு நல்லது என்று நம் பாட்டி தாத்தா சொல்லி கேட்டிருப்போம். இதனை வெளியில் பயன்படுத்தினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

கறிவேப்பிலையில் என்ன உள்ளது:
கறிவேப்பிலையில் ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் அமினோ அமிலங்கள் அதிக அளவில் கானப்படுகின்றன. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், முடியின் வேர்பகுதிகளை வலுவாக்கும் மற்றும், முடி மெலிந்து போவதை தடுக்கும் தன்மை கொண்டது. எனவே இது முடி உதிர்வை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமினே ஆசிட் முடியில் ஈரப்பதத்தை ஏற்படுத்துகிறது. இதை தவிற கருவெப்பிலையில் பீட்டா கரோட்டின் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. பீட்டா கரோட்டின் முடி உதிர்வை தடுக்கும் தன்மையும், புரதம் முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

எப்படி உபயோகிப்பது:
உங்கள் முடிக்கேற்ற அளவு கரிவேப்பிலையை எடுத்து நன்கு அரைத்துக்கொள்ளவும். கூடுதல் பலனிற்க்கு இதனுடன் சிறிது ஊரவைத்த வெந்தைய விதைகளை சேர்த்துக் கொள்ளலாம். அரைத்த விழுதை தலைமுடியில் நன்கு பரப்பி, 2 மணி நேரம் வரை ஊரவிடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு, தலையை நன்கு கழுவவும்.

கறிவேப்பிலையின், தன்மை காரணமாக தலை சற்று பிசுபிசுப்பாக இருக்கும். இது சாதாரனம் தான், தலை காய்ந்ததும் இது சரி ஆடிவிடும். இது கஷ்டமாக இருந்தால், லேசாக ஷாம்பு போட்டு அலசிக் கொள்ளலாம். இவ்வாறு வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால், முடி இயற்கையாகவே, வலிமை அளிப்பதுடன், நல்ல கறுப்பு நிறத்திலும், மிருதுவாகவும் இருக்கும்.

முடி உதிர்வை தடுக்க எண்ணெய்:
கறிவேப்பிலை, கருப்பு சீரகம், வெந்தய விதைகள் இவற்றை நன்கு அரைத்து விழுதாகிக் கொள்ளவும். பொடுகு பிரச்சனை இருப்பின் வேம்பு இலைகள் சிலவற்றையும் சேர்த்துக்கொள்ளவும். இந்த விழுதை வழக்கமாக உபயோகிக்கும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து உபயோகிக்கவும்.இதை, தலையில் தேய்த்து எட்டு மணி நேரம் கழித்து ஷாம்பு அல்லது சிகைக்காய் போட்டு முடியை சுத்தம் செய்துகொள்ளவும். முடி உதிர்வை தடுப்பதுடன், தலை முடியை முடி ஷைனாகவும் வைத்துக்கொள்ள இது உதவும்.