மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய தடை..!

305

mallikaநடிகை மல்லிகா ஷெராவத்தை ஆபாச நடனம் தொடர்பாக கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி மும்பையில் 5 நட்சத்திர ஓட்டலில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் பங்கேற்று நடனமாடினார்.

அவரது நடனம் பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இவரது நடனம் மிகுந்த ஆபாசமாக இருந்ததாக கூறி சட்டத்தரணி நரேந்திர திவாரி மற்றும் பரோடா சட்டத்தரணி சங்க முன்னாள் தலைவர் ஆகியோர் கடந்த 2007ம் ஆண்டு வதேரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மல்லிகா ஷெராவத்துக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மல்லிகாஷெராவத் குஜராத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் வதேரா நீதிமன்றம் கடந்த யூலை மாதம் 8ம் திகதி மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய வாரண்டு பிறப்பித்தது.

பிணையில் வெளிவரக்கூடிய வகையிலான இந்த கைது வாரண்டை எதிர்த்து மல்லிகா ஷெராவத் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான பெஞ்ச் வதேரா நீதிமன்றத்திற்கு பிறப்பித்த கைது வாரண்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.