வவுனியாவில் பொதுமக்களை வெளியேற்ற வன இலகா அதிகாரிகள் முயற்சி : பொதுமக்கள் எதிர்ப்பு!!

803

 
வவுனியா ஆசிகுளம் பகுதியில் 2005ம் ஆண்டு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பினரால் காணி அற்ற இடம்பெயர்ந்த பொதுமக்கள் 1000 பேருக்கு வழங்கப்பட்ட காணி அப்பகுதியிலிருந்து யுத்த சூழ்நிலை காரணமாக 2007ம் ஆண்டு வெளியேறிய பொதுமக்கள் தற்போது தமது காணிகளை இனங்கண்டு இப்பகுதிக்குச் சென்று குடியேறுவதற்கு 600 குடும்பங்கள் காணிகளை துப்பரவு செய்து கொண்டிருந்த பொதுமக்கள் வன இலகா அதிகாரிகளால் அப்பகுதியில் குடியேற அனுமதிக்கப்படவில்லை.

தமது காணியினை துப்பரவு செய்த 7பேர் வன இலகா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2007ம் ஆண்டு தமது காணிக்கான ஆவணங்களை மேற்கொண்டபோது இடம்பெயர்ந்து உறவினர் பொது இடங்களில் தங்கியிருந்து தற்போது திரும்பவும் தமது இருப்பிடத்திற்கு சென்றுள்ளனர். எனினும் அப்பகுதியில் வேறு ஒருவருக்கு கிணறு தோண்டி விவசாயம் செய்வதற்கு வன இலகா அதிகாரிகள் அனுமதித்துள்ளதாகவும் மக்கள் தெரிவிகின்றனர்.

பெரும்பான்மை இனத்தவர்கள் அருகில் வசிப்பதாலும் இப்பகுதி தமிழ் தெற்கு பிரதேசசபையின் பகுதியில் வருவதால் பொதுமக்கள் வசிப்பிடத்திற்கு அருகில் 15 பெருன்பான்மை இனத்தவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இன்று இப்பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் தமக்கான காணியினை பெற்றுத்தருமாறும், தாம் காணிகள் இன்றி உறவினரின் காணிகளில் வசித்துவருவதாகவும் தமது பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வினை பெற்றுத்தருமாறும் தெரிவித்தனர்.

1 2 DSC04461 DSC04465 DSC04467 DSC04474 DSC04478 DSC04483 DSC04485