காலி கோட்டை உலக வரலாற்று தரத்தில் இருந்து விலக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
காலி கோட்டைக்குள் அமைக்கப்படும சட்டவிரோத கட்டிடங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக யுனெஸ்கோ எச்சரித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய வரலாற்றுத்துறை அமைச்சர் ஜெகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் காலி மைதானத்துக்காக அமைக்கப்படும் பார்வையாளர் கூடம், கோட்டைக்குள் அமைக்கப்படும் வீடுகள், கட்டிடங்கள் என்பன தொடர்பிலேயே யுனெஸ்கோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.





