நியூஸிலாந்தின் பால் மா தொடர்பில் இலங்கையில் பிரச்சினை ஏற்பட்டு பால்மாக்கள் தொடர்பில் விளம்பரங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விளம்பர தடை ஒன்று அமுல்செய்யப்படவுள்ளது.
இலங்கையில் தற்போது நீரிழிவு நோயின தாக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு பயிர்களுக்கு இடப்படும் பசளையும் காரணமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சில பசளைகளுக்கான விளம்பரங்களையும் தடைசெய்யவேண்டும் என்று ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.இந்த யோசனை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.





