வவுனியாவில் காணாமல் போன சிறுமி பொலிசாரால் மீட்பு!!

602

Vavuniya-Girl-Missing

வவுனியா நெடுங்கேணி ஒலுமடு வேலடியைச் சேர்ந்த 17 வயதுடைய சந்திரகுமார் கிருசாந்தினி என்ற யுவதி கடந்த சனிக்கிழமை (11.06.2016) அன்று வவுனியாவிற்கு தையல் பயிற்ச்சிக்கான உபகரணங்கள் வாங்கச் சென்ற போது காணாமல் போயுள்ளதாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இம் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையினை மேற்கொண்ட பொலிசார் நெடுங்கேணி பகுதியில் நேற்று (14.06.2016) இரவு 11.30 மணியளவில் குறித்த மாணவியினை மீட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் 17 வயது மாணவியைக் காணவில்லை!!