வவுனியா தாண்டிக்குளம் பாடசாலைக்கு அருகே இன்று (15.06.2016) சற்றுமுன் இரு தனியார் பேரூந்துகளின் சாரதிகள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேரூந்தும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்தும் இன்று (15.06.2016) சற்று முன்னர் வவுனியா தாண்டிக்குளம் பாடசாலைக்கு அருகே சந்தித்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது.
இரு பேரூந்தின் சாரதிகளும் வீதியின் நடுவே பேரூந்தினை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் பாரிய வாகன நேரிசல் ஏற்ப்பட்டது.
இதனையடுத்து எமது செய்தியாளர் இச் சம்பவத்தினை உடனடியாக போக்குவரத்துப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து இரு பேரூந்தினையும் தாண்டிக்குளம் பாலத்திற்கு அருகே மடிக்கிப் பிடித்த பொலிசார் விசாரணையினை மேற்கொண்டனர்.
இதுபோன்ற சம்பவங்களால் பாதிப்படைவது பிரயாணிகளே.எனவே உரியவர்கள் இவ் விடயத்தில் கவனமெடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.









