வவுனியாவைச் சேர்ந்த மூவர் இந்திய கடற்பரப்பில் மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர்!!

621

vavuniya

தமிழகத்தின் கோடிக்கரை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று இலங்கையர்கள் கடந்த சனிக்கிழமை இரவு காப்பாற்றப்பட்டனர்.

நாகபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களால் குறித்த மூவரும் காப்பாற்றப்பட்டனர்.

இரண்டு வயது குழந்தையொன்றும் அதன் பெற்றோருமே கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், மீனவர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

துஷ்யந்தன், துவாரகா தம்பதியினரும் அவர்களின் இரண்டு வயது குழந்தையுமே மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல முயற்சித்துள்ளதாக தமிழக கரையோர கடற்படைத் தளபதி எஸ்.எம்.பட்நாயக் கூறினார்.

Va