தங்கும் விடுதியின் அறையொன்றில் இருந்து 40 மலைப் பாம்புகள் மீட்பு..!

499

snakeகனடாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் அறையில் 40 மலைப் பாம்புகள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்ட்போர்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஒரு தம்பதியர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் வெளியே சென்றுவிட்டு மீண்டும் அறைக்கு திரும்பாத காரணத்தால் அவர்களின் அறையை சோதனையிட்ட விடுதி ஊழியர்கள் பெரிய பிளாஸ்டிக் பெட்டிகளில் சுமார் 40 மலைப் பாம்புகள் இருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

இதை தொடர்ந்து அவர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து விடுதிக்கு வனவிலங்கு காப்பக ஊழியர்களுடன் விரைந்த பொலிசார் 40 மலைப் பாம்புகளையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகள் 30 செ.மீ. முதல் 1.4 மீட்டர் நீளம் கொண்டவையாக இருந்தன. ஆரோக்கியமற்ற நிலையில் இருந்த அவற்றை விலங்குகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மலைப் பாம்புகளை வைத்திருப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ள காரணத்தினால் தற்போது தலைமறைவாகி இருக்கும் அந்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.