சீனாவில் குழந்தைகள், பாடசாலை மாணவர்கள் படிக்கும் புத்தகத்தில் ஆபாச படம், வன்முறை தகவல்கள் இடம்பெற்றுள்ளதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தொடக்க, நடுநிலை பாடசாலை மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் மாணவர்கள் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
அறிவியல், பொது அறிவு, வரலாறு உள்ளிட்ட பல்வேறு புத்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக புத்தக கடைகளில் ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆபாச படங்கள், வன்முறை தகவல்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன என்று புகார் எழுந்துள்ளது.
சீனாவில் பீஜிங், குவாங்ஜி உள்பட பல முக்கிய நகரங்களில் விற்கப்படும் புத்தகத்தில் வன்முறையை தூண்டும் விதத்திலும், ஆபாசமான செய்தி, படங்களும் இடம்பெற்றுள்ளன.
அவற்றை தடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். சாகச புத்தகங்கள் என்ற பெயரில் வன்முறையை தூண்டும் கதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை உடனடியாக தடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதுகுறித்து பீஜிங் பல்கலை சமூகவியல் துறை பேராசிரியர் ஜியா ஜூயுலுயன் கூறுகையில், சீனாவில் உள்ள புத்தக கடைகளில் குழந்தைகளுக்காக வாங்க கூடிய புத்தங்கள் ஒழுக்கமற்ற கீழ்த்தரமான நிலையில் உள்ளன. அவற்றை தடை செய்ய வேண்டும் என்றார்.





