பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தவர்கள் மடக்கி பிடிப்பு – வவுனியா சிவபுரத்தில் சம்பவம்..!

738

arrest1வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவபுரத்தில் பெண்ணொருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிய கும்பலை வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வவுனியா சிவபுரத்தில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இச்சம்பம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் பிரதான வீதிக்கு நடந்து வந்து கொண்டிருந்த பொழுது முச்சக்கர வண்டியில் வந்து வழிமறித்த மூவரடங்கிய கும்பல் பெண்ணின் கழுத்திலிருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

உடனடியாக அப்பெண் தனக்கு தெரிந்தவர்களுக்கு தொலைபேசியூடாக இது பற்றித் தெரிவித்துள்ளார்.

மேற்படி முச்சக்கர வண்டியைத் துரத்திச் சென்று இளைஞர்கள் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய மூவரரையும் பிடித்துள்ளதுடன் அவர்கள் பயணம் செய்த முச்சக்கர வண்டியையும் கைப்பற்றி வவுனியா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.