அசினின் வாய்ப்பை தட்டிப் பறித்த ஸ்ருதி..!

320

shrutiஅசின் கதாநாயகியாக நடிக்க இருந்த இந்தி பட வாய்ப்பை ஸ்ருதி ஹாசன் தட்டிச் சென்றுள்ளார்.
இந்திப் பட இயக்குனர் அனீஸ் பாஸ்மி 2007ல் இயக்கிய படம், ‘வெல்கம்’.

இதன் அடுத்த பாகத்தை ‘வெல்கம் பேக்’ என்ற பெயரில் இயக்குகிறார்.

இதில் கதாநாயகியாக நடிப்பதற்கு அசினை ஒப்பந்தம் செய்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் அவரை மாற்றிவிட்டு ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சமீபத்தில் ஸ்ருதி நடித்து வந்த ‘ராமையா வஸ்தாவையா’, ‘டிடே’ படங்களில் அவரது நடிப்பினை பார்த்து இந்த முடிவை படக்குழுவினர் எடுத்ததாகத் தெரிகிறது.

இது குறித்து அனீஸ் பாஸ்மி கூறுகையில், ‘ஸ்ருதி இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பதால் அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்’ என்றார்.