ஒருவழியாக சர்ச்சைகள் நீங்கி திரைக்கு வருகிறது தலைவா..!

342

thalaivaஒருவழியாக தலைவா பிரச்னை தீர்ந்து நிபந்தனை அடிப்படையில் வருகிற 20ம் திகதி தமிழகம் முழுவதும் வெளியாகிறது.

விஜய், அமலா பால் நடிப்பில் உருவான தலைவா படத்தினை தமிழகத்தில் வெளியிடுவதற்கு பல சிக்கல்கள் இருந்து வந்தது.

இந்தப் படம் வெளியாகாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை இதுவரை நடிகர் விஜய்யும் இயக்குனர் விஜய் அல்லது இப்போது நெஞ்சு வலி என மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கும் படத்தின் தயாரிப்பாளரும் சொல்லவே இல்லை.

இந்தப் படத்தின் வெளியிட்டிற்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பொலிசார் கூறிவிட்டனர்.

ஆனால் படத்தை வெளியிட வேண்டிய வேந்தர் மூவீஸோ வாயைத் திறக்கவில்லை.

இதனால் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு இந்தப் படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முதல்வரைச் சந்திக்க அனுமதியும் கோரி வந்தனர். ஆனால் முதல்வர் இதையெல்லாம் சட்டை செய்யாமல் இந்தப் படத்துக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மிகத் தெளிவாக அவர் உணர்த்திவிட்டார்.

இந்நிலையில், தலைவா படத்துக்கு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. என்னிடம் கொடுங்கள் நான் 300 திரையரங்குகளில் வெளியிட்டுக் காட்டுகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் திமுக எம்எல்ஏவும், புதிதாக தயாரிப்பாளரானவருமான ஜெ அன்பழகன்.

இதனைத் தொடர்ந்து படத்தை வெளியிட விஜய்யும், வேந்தர் மூவீஸும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.

தலைவா படமானது வருகின்னற ஒகஸ்ட் 20ம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியாகும் என்றும் இன்று முதல் முன்பதிவு தொடங்கும் எனவும் வேந்தர் மூவீஸ் அறிவித்துள்ளது.

ஆனால் படத்தை மினிமம் கியாரண்டி என்ற அடிப்படையில் திரையிட மாட்டோம் என்றும் சதவீத அடிப்படையில் வெளியிடுகிறோம் எனவும் திரையரங்க உரிமையாளர்கள் நிபந்தனை விதித்தே படத்தை வெளியிடுகின்றனர்.