சர்வதேச தந்தையர் தினமான நேற்று(19.06.2016) வன்னிப் பட்டறை அமைப்பு மூலம் இராமனூர் புளியங்குளத்தில் வசிப்பவரும், புளியங்குளம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ப்பவருமான தில்லைநாதன் தட்சிகாவுக்கு அவரது தந்தை தில்லைநாதன் கைகளாலேயே அவரது கற்றல் நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் துவிசக்கரவண்டி வழங்கப்பட்டது.
சமூக ஆர்வலரும், தமிழ் விருட்சத்தின் நெடுங்கேணி இணைப்பாளருமான செ.சபாநாதன் அவர்கள் தட்சிகாவின் குடும்ப நிலையை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) அவர்களுக்கு எடுத்து சொன்னதன் பிரகாரம் கனடாவை தளமாக கொண்டு வன்னியை மட்டுமல்லாமல் வடகிழக்கில் வறுமைக்கோட்டுக்கு உட்பட பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றிவரும் வன்னிப் பட்டறை அமைப்பு மூலம் துவிசக்கரவண்டியை நேற்று தந்தையர் தினம் நடந்த குடியிருப்பு சிறுவர் பூங்காவில் வைத்து புளியங்குளம் இந்துக் கல்லூரி அதிபர் ச.பரமேஸ்வரநாதன், வன்னி பட்டறை அமைப்பு, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொள்ள தட்சிகாவின் தந்தை தில்லைநாதன் அவர்கள் தனது மகளுக்கு துவிசக்கரவண்டி வழங்கி தந்தையர் தினத்தில் மகிழ்ந்து கொண்டார்
பெற்றுக்கொண்ட தட்சிகா வன்னிப் பட்டறைக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

















