தலைவா சர்ச்சைகளின் எதிரொலி – கைவிடப்படுகிறதா விஜய்யின் ஜில்லா..?

474

jillaவிஜய் நடித்த தலைவா படம் திரையிடப்படுவதில் நீடித்துவந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்குவந்த நிலையில் இன்னொரு அதிர்ச்சிகரமான செய்தி அவரை வந்தடைந்துள்ளது.

விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் ஜில்லா படக்குழுவினர்களுக்கு மேலிடத்தில் இருந்து ரகசிய உத்தரவு வந்துள்ளதாம்.

ஜில்லா படத்தை உடனடியாக நிறுத்தும்படியும், மீறி படம் எடுக்கப்பட்டால் அதை ரிலீஸ் செய்வதிலும் தடை ஏற்படும் என மிரட்டல் வந்துள்ளதால் இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 30 சதவிகித படம் முடிந்துவிட்டதால் படத்தை கைவிடுவதா? அல்லது விஜய்க்கு பதில் வேறு நடிகரை புக் செய்வதா? என்ற குழப்பத்தில் உள்ளனர் படக்குழுவினர்.

படத்தின் ஹீரோயினுக்கும் தனிப்பட்ட முறையில் மிரட்டல் வந்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.