வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தரை அச்சுறுத்திய 4 இளைஞர்கள் கைது!!

1329

vavuniya_hospital

வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தரை அச்சுறுத்திய 4 இளைஞர்கள் இன்று(20.06.2016) மாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

இன்று மாலை விபத்துப் பிரிவில் நோயாளரை பார்வையிடும் நேரம் முடிவடைந்தும் விபத்துப்பிரிவில் நோயாளரை பார்வையிட்டு வைத்தியசாலை விடுதி தாதிய உத்தியோகத்தரின் பணிக்கு இடையூறு எற்படுத்திக் கொண்டிருந்த 4 இளைஞர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு விடுதி தாதிய உத்தியோகத்தர் கோரியுள்ளார்.

குறித்த இளைஞர்கள் தாதிய உத்தியோகத்தருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் வெளியே வா உன்னை ஒரு கை பார்ப்பதாகவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

உடனடியாக வைத்தியசாலை பொலிசாரிடம் தாதிய உத்தியோகத்தர் முறையிட்டதையடுத்து பொலிசார் குறித்த 4 இளைஞர்களையும் கைது செய்துள்ளதுடன் விசாரணையின் பின்னர் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த மாதமும் வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப் பிரிவில் தாதிய உத்தியோகத்தரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞர்களை பொலிசார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.