பொலிவியா நாட்டில் ஆதிவாசி மனிதன் ஒருவர் 123 வயதுடன் வாழ்ந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பொலிவியாவின் பிரேஸ்குயா என்ற மலைப்பிரதேசத்தில் கார்னிலோ புளோரஸ் லாவூரா என்பவர் வாழ்ந்து வருகிறார்.
கடந்த 1890ம் ஆண்டு ஜீலை மாதம் 16ம் திகதி பிறந்த கார்னிலோவுக்கு, 3 பிள்ளைகள், 16 பேரன்- பேத்திகள், 39 கொள்ளுப்பேரன்- பேத்திகள் இருக்கிறார்கள்.
பற்களை இழந்தாலும் கூட நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படும் கார்னிலோ, எவ்வித உதவியும் இன்றி வெகுதூரம் நடக்கிறார்.
இவருடைய நீண்டகால ரகசியம் பற்றி கூறுகையில், நரி, கீரி இறைச்சியை அதிகம் விரும்பி சாப்பிடுவது, நீண்டதூரம் நடப்பது ஆகியவை தான் என்கிறார்.
மேலும் புரதசத்துள்ள தானியங்கள் அவ்வப்போது பன்றி, ஆட்டு இறைச்சி உண்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இவருக்கு பிறந்தநாள் சான்று இல்லை என்பதால், வெறும் வாய்மொழி தகவல் மூலம் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.








