40 வருடங்களாக கெட்டுப்போகாத கேக்!!

524

Cake

1976 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜார்ஜ் ஸ்டீவன்ஸ் கல்வியகத்தில் வேதியியல் ஆசிரியராக இருந்தவர் ரோஜெர் பென்னாட்டி. ஒருநாள் ட்வின்கியை (கேக்) வகுப்பறையில் வைத்து, இது காலாவதியாவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று கேட்டார்.

மாணவர்கள் ஒருவருக்கும் தெரியவில்லை. ரோஜெருக்கே கூட இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை. காகிதம் சுற்றப்படாத ட்வின்கியை ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து மூடினார்.

எத்தனை நாட்களில் காலாவதியாகும் என்பதை நேரடியாகப் பார்த்துவிடலாம் என்பது அவரது திட்டம். ஆனால் 40 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை!

உலகிலேயே மிகப் பழமையான ட்வின்கி என்ற பெயருடனான கேக், 40 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வைக்கப்பட்டதோ, அப்படியே இருக்கிறது!

இன்று கூட ட்வின்கியை 25 நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்கிறது தயாரிப்பு நிறுவனம்.

“நாங்கள் உணவு குறித்து ஆராய்ந்துகொண்டிருந்தோம். இந்த ட்வின்கியை பரிசோதனைக் கூடத்தில் வைத்துவிட்டோம். 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஜெர் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டார். அதற்குப் பிறகு இந்தப் பரிசோதனை என்னிடம் வந்து சேர்ந்தது. இதுவரை யாரும் இதை எடுத்துப் பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்யவில்லை. இன்னும் எவ்வளவு காலம் இது தாக்குப் பிடிக்கிறது என்று பார்ப்போம்.

எனக்குப் பிறகு வருகிறவர்கள் இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து, பாதுகாத்தால் எங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்!’’ என்கிறார் இங்கே பணிபுரியும் லிபி ரோஸ்மியர். 40 ஆண்டுகளாகக் கெட்டுப் போகாத கேக் குறைந்தபட்ச தேவைகளுடன் வாழ்க்கை நடத்தும் கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் பரவி வருகிறது.