மாகாணசபைத் தேர்தல்கள் – இதுவரை 137 முறைப்பாடுகள் பதிவு

326

votingவடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண தேர்தல் முறைகேடுகள் தொடர்பில், இதுவரை 137 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் இருந்தே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி குருநாகல் மாவட்டத்தில் இருந்து 43 முறைப்பாடுகளும், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 24 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது.

இதேவேளை அரச சொத்துக்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் 28 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் குறித்து 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தமக்கு தேர்தல் தொடர்பிலான 134 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.