இந்திய அணிக்கு திரும்ப காம்பீர், யுவராஜ் போராட வேண்டும் – கங்குலி..!

291

gangulyஷேவாக், கம்பீர், யுவராஜ்சிங், சாஹிர்கான், ஹர்பஜன்சிங் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத இந்திய இளம் அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி, வெஸ்ட்இண்டீசில் நடந்த 3 நாடுகள் போட்டி, ஜிம்பாப்வே தொடர் ஆகியவற்றில் இளம் வீரர்களை கொண்ட அணி முத்திரை பதித்தது.

2011–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்று இருந்த ஷேவாக், காம்பீர், சாஹிர்கான், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் போன்ற வீரர்கள் மோசமான ஆட்டம் காரணமாக படிப்படியாக அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டனர். அவர்கள் இடத்தில் தவான், ரோகித்சர்மா, தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர்குமார், அஸ்வின் சிறப்பான நிலையில் உள்ளனர்.

இந்த முன்னணி வீரர்கள் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது என்பது கேள்வி குறியானதே. அவர்கள் ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் கம்பீர், யுவராஜ்சிங், சாஹிர்கான் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்புவார்கள் என்று இந்திய அணி முன்னாள் கெப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–

எந்த ஒரு வீரரையும் அணியில் இருந்து முழுமையாக வெளியேற்ற முடியாது. ஷேவாக், காம்பீர், யுவராஜ்சிங், சாஹிர்கான் போன்ற வீரர்கள் இல்லாத அணி 2011–ம் ஆண்டில் இல்லை. ஆனால் அவர்கள் தற்போது அணியில் இல்லை எனவே நாளைக்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.

அவர்கள் அனைவருமே சிறந்த வீரர்கள் தான். உலக கோப்பையை வென்று கொடுத்தனர். அவர்கள் இந்திய அணியில் மீண்டும் இணையும் ஆர்வத்தில் உள்ளனர். இதற்காக அவர்கள் கடுமையாக போராட வேண்டும். அவர்களால் அணியில் மீண்டும் இடம் பெறமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடும் உழைப்பு, உடல் தகுதி மூலமே அவர்கள் அணியில் இடம் பெற முடியும்.

ஷேவாக் மிகச்சிறந்த தொடக்க வீரர். சாஹிர்கான் 300 விக்கெட் வரை நெருங்கி உள்ளனர். யுவராஜ்சிங் உலக கோப்பையில் முத்திரை பதித்தவர். இவர்கள் நீண்ட காலம் அணியில் இல்லாமல் இருக்க முடியாது.

கம்பீர் இங்கிலாந்து கவுண்டியில் விளையாட எடுத்த முடிவு சரியானதே. எந்த ஒரு வீரரும் பாடம் கற்பதன் மூலமே அணிக்கு திரும்ப முடியும். இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.