பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்..!

518

sivaஇயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தான் இயக்கிய ‘தாஜ்மகால்’ படம் மூலம் மனோஜை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

அதன் பின்பு ‘சமுத்திரம்’, ‘கடல் பூக்கள்’, ‘ஈரநிலம்’ என சில படங்களில் நடித்தார். ஆனால், எதுவுமே கைகொடுக்கவில்லை.

நடிக்க வருவதற்கு முன்பே இயக்குனர் மணிரத்னத்திடம் ‘பம்பாய்’ படத்தில் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார் மனோஜ்.

பின்பு, பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்தில் அப்பாவிடமே உதவி இயக்குனநராகப் பணியாற்றினார்.

இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ படத்திலும் உதவி இயக்குனராகப் பணிபுரிந்துள்ளார்.

இப்படி உதவி இயக்குநர், நடிகர் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்துவந்த மனோஜ், இயக்குனராகக் களம் இறங்குகிறார்.

தான் இயக்கும் முதல் படத்தில் கதாநாயகனா சிவகார்த்திகேயனை புக் செய்துள்ளாராம் மனோஜ்.