எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத தலைவா டிக்கெட் விற்பனை..!

294

thalaivaகடந்த 9 ஆம் தேதியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய விஜய்யின் தலைவா சில தலையீடுகளின் காரணமாக தள்ளிப் போய், ஆகஸ்ட் 20 நாளை ரிலீசாகிறது.

9 ஆம் தேதி படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு 20 ஆம் தேதி இருக்குமா என்ன? எதிர்பார்ப்பு அன்று இருந்ததைக் காட்டிலும் குறைந்திருக்கிறது.

இதற்கு காரணம், படத்தை எல்லோரும் திருட்டு டிவிடியில் பார்த்துவிட்டார்கள், இணையதளத்தில் பார்த்து விட்டார்கள் என்ற காரணங்களை சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. காரணம், படத்தை தியேட்டரில் பார்ப்பவர்கள் என்று இருந்தாலும் தியேட்டரில்தான் பார்ப்பார்கள், அதே நேரத்தில் அடுத்தவன் உழைப்பை சுரண்டி வாழ்பவர்கள் திருட்டு விசிடியில் பார்த்துவிடுவார்கள்.

படத்தின் எதிர்பார்ப்பு கொஞ்சம் குறையக் காரணம் படத்தினைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள்தான்.

ஆனாலும் படத்திற்கான புக்கிங் ஆரம்பித்து இப்போது வரைக்கும் முதல் நாள், இரண்டாம் நாள் காட்சிகள் பல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.பரபரப்பாக விற்பனை ஆகிக் கொண்டும் இருக்கின்றன.

தலைவா படத்தைப் போன்றே விஸ்வரூபமும் தாமதமாகத்தான் ரிலீஸ் செய்தார்கள். ஆனால் அந்தப் படத்திற்கு இந்த அளவுக்கு திருட்டு விசிடிகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆரோ தொழில்நுட்பம் போன்றவற்றை கமல் பயன்படுத்தியிருந்ததால் படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்கள் ஏராளம். அதுவும் கூட விஸ்வரூபம் பெரும் வெற்றியடைய ஒரு காரணம்.

தலைவாவை எதிர்மறை விமர்சனங்களைத் தாண்டி, ரசிகர்கள் வெற்றியடைய வைப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!