மலேசியாவில் குற்றங்களில் ஈடுபட்ட 3 தமிழர்கள் உள்பட 5 பேர் சுட்டுக்கொலை..!

570

malaysiaமலேசியாவில் பல இடங்களில் துப்பாக்கி சூடு, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வந்ததால் குற்றவாளிகளை பிடிக்க மலேசிய பொலீசார் தீவிர வேட்டை நடத்தினார்கள்.

அப்போது கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலை பிடிக்க வடக்கு பினாங் மாநிலம் ஜோர்ஜ் டவுன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர்.

அங்கு பதுங்கியிருந்த 5 பேரை பொலீசார் சுட்டுக் கொன்றனர். அவர்களில் 3 பேர் இந்திய வம்சாவளியினர் என்று பொலீசார் தெரிவித்தனர். தமிழர்களான அவர்கள் ஜெ.கோபிநாத் (வயது 31), என்.ராகன் (25), எம்.சுரேஷ் (25) என்று தெரியவந்தது. இதுதவிர நாடு முழுவதும் சந்தேகப்படும்படியான 200 பேரை கைது செய்துள்ளதாகவும் பொலீசார் தெரிவித்தனர்.