ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க முட்டை : ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் அலாஸ்கா வளைகுடாவில் 3,300 அடி ஆழத்தில் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘தங்க முட்டை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முட்டை என சந்தேகிக்கப்படும் இந்த மர்ம பொருள் குறித்து தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதன் முதற்கட்ட பரிசோதனையில் இந்த மர்மப்பொருள் உயிரியல் தோற்றம் கொண்டது என தெரியவந்துள்ளது.முட்டை வடிவிலான இந்த பொருள் வெடித்து சிதறியதால், ஏதேனும் உயிரினம் வெளியே வந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த பொருள் எந்த விலங்கின் முட்டை என்பது யாருக்கும் தெரியாது. இப்படி ஒரு பொருள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை.

இந்த மர்மமான பொருளின் அகலம் 10 செ.மீ. இது உண்மையிலேயே முட்டையாக இருந்தால், கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்படாத உயிரினமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் ஊடகங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடலுக்கு அடியில் ஆய்வு மேற்கொண்டபோது இந்த முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3 நண்பர்கள் நடு வீதியில் துடிதுடித்து பலியான சோகம்!!

ராமநாதபுரத்தில்..

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி சத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் இராசேந்திரன். இவரது நண்பர்க, அன்பரசன், லிங்கேஸ்வரன். இவர்கள் மூவரும் மேலசெல்வனூர் ஊரில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை காண மோட்டார் சைக்கிளில் டிரிபிள்ஸ் சென்றனர்.

சாத்தங்குடி விலக்கு அருகே சென்ற போது, ராமநாதபுரம் புத்தேந்தல் பகுதியில் இருந்து மின்னல் வேகத்தில் ஆம்னி வேன் ஒன்று வந்தது. இந்த வேன் மாணவர்களின் மோட்டார் சைக்கிளுடன் பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இராசேந்திரன், அன்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் லிங்கேஸ்வரன் ஆம்புலன்சில் உயிரிழந்தார்.

3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்னி வேன் ஓட்டுநர் பாலமுருகன் தலையில் படுகாயம் மடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆடல் பாடல் நிகழ்ச்சியை காணச்சென்ற நண்பர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதன் முதலில் விமானியாகி சாதனை படைத்த பழங்குடியினப் பெண்!!

நீலகிரியில்..

நீலகிரி மண்ணின் மைந்தர்களான படுக இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.

படுகர் இன மக்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். பொதுப் பிரிவு பட்டியலில் உள்ள இவர்கள் தங்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த படுகர் சமுதாயத்தை சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் காலூன்றி வருகின்றனர்.அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாயத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் முதல் முறையாக விமானியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள நெடுகுளா குருக்கத்தி பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மணி , இவருடைய மனைவி மீரா. இவர்களுடைய மகள் ஜெயஸ்ரீ தான் தற்போது நீலகிரி படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்வாகியுள்ளார்.

பள்ளி படிப்பை முடித்த இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து, சில காலம் ஐடி துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பின்னர் விமானியாக ஆக வேண்டும் என்று முடிவு செய்து பைலட் பயிற்சி முடித்து தற்போது விமானியாக சேர்ந்துள்ளார்.

இதற்காக தென்னாப்பிரிக்காவில் விமான பயிற்சி எடுத்துக்கொண்டார். படுகர் சமுதாயத்தில் பெண் ஒருவர் படிப்பை முடித்து இது போன்ற துறையில் நுழைந்து இருப்பது படுகர் சமுதாயத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு ஒரு தூண்டுகோளாக உள்ளது.

நாய் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த 14 வயதுச் சிறுவன்.. எச்சரிக்கைச் செய்தி!!

இந்தியாவில்..

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் நாய் கடித்து 14 வயது சிறுவன் உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது.உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் வசித்து வருபவர் யாகூப், பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் ஷாவாஸ்(வயது 14), 8ம் வகுப்பு படித்து வருகிறான், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக பக்கத்து வீட்டில் உள்ள நாய் ஒன்று ஷாவாஸை கடித்துள்ளது.

வீட்டில் சொன்னால் பெற்றோர் திட்டுவார்கள் என்பதற்காக நாய் கடித்ததை மறைத்துள்ளான், இந்நிலையில் கடந்த 4ம் தேதி காலையில் இருந்து ஷாவாஸின் உடல்நலம் குன்றியது.உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, ஷாவாஸை பரிசோதித்த மருத்துவர்கள் நாய் கடி விஷம் ஏறிவிட்டதாக கூறியுள்ளனர்.

ஷாவாஸிடம் விசாரித்ததில், பக்கத்து வீட்டு நாய் தன்னை கடித்ததாக கூறியுள்ளான், இதற்கிடையே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.இதுகுறித்து, போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டுக்கார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் நாய்க்கு தடுப்பூசி போடாமல் வளர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது, தங்கள் நாய் அச்சிறுவனை கடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குடும்பத் தகராறில் பெண் எடுத்த விபரீத முடிவு.. தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!!

ஆத்தூரில்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூவர் தெருவில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இளம்பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், உயிரிழந்த பெண் பாரதியார் தெருவில் வசித்து வரும் டைலர் முருகனின் மனைவி சாந்தி [45] என்பதும் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சாந்திக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு கணவன் மனைவிக்கு இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணவர் முருகனிடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன், மனைவி தகராறில் மனைவி எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞன்.. துண்டான கையை மற்றொரு கையில் எடுத்துச் சென்ற அவலம்!!

பீகாரில்..

பீகார் மாநிலத்தில் வசித்து வருபவர் சுமன்குமார். இளைஞரான இவர் வழக்கமான ரயில் பயணித்தில் கீழே விழுந்துவிட்டார். கீழே திடீரென விழுந்ததில் அவரது கை துண்டானது.

துண்டான கையை மற்றொரு கையில் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு நடக்க தொடங்கினார். பீகார் மாநிலம் பாகல்பூர் சுல்தாங்கஞ்ச் பகுதியில் அவர் கையுடன் சாலையில் நடந்து சென்றார். அதனைப் பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். மேலும் சிலர் அந்த காட்சியை மொபைலில் புகைப்படங்கள் வீடியோக்களாக எடுத்து பதிவிட்டனர். தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அந்த இளைஞரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அவர் ரயிலில் பயணித்த போது, கீழே விழுந்ததில் ஒரு கை துண்டானதாகவும், அந்தக் கையை மீண்டும் இணைப்பதற்காக மருத்துவமனையைத் தேடிச் சென்றதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

போலீசார் அவரை உடனே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இளைஞரின் செயலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தம்பியை கொன்று புதைத்து.. மாங்கன்று நட்ட அண்ணன்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த திருவல்லத்தை சேர்ந்தவர் பேபி. இவருக்கு இரண்டு மகன்கள், மூத்த மகன் பினு, இளைய மகன் ராஜ். இந்நிலையில் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இருந்து தனது இளைய மகன் ராஜுவை காணவில்லை திருவல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து மூத்த மகன் பினுவை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தனது தம்பியை அடித்ததாகவும் அதில், தனது தம்பி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உடலை அப்புறப்படுத்துவதற்காக வீட்டின் தோட்டத்திலேயே உடலை புதைத்துவிட்டதாகவும் பினு தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ந்து போயுள்ளனர் போலீசார். பேபியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஓணம் பண்டிகையின் போது தான் தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார். மேலும் ராஜூவைக் காணவில்லை என பினுவிடம் கேட்ட போதெல்லாம் அவர் பதில் கூறாமல் தவிர்த்து வந்ததாகவும் பேபி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பல மாதங்களுக்கு முன்பு தோட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் புதிதாக மாமரம் ஒன்று நடப்பட்டிருப்பதைக் கண்டு சந்தேகமடைந்ததாகவும் பேபி தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜுவின் உடலை தோண்டியெடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் பினுவையும் போலீசார் கைது செய்துள்ளனர். பினுவை கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகின்றனர். அண்ணன் தம்பி சண்டையில் அண்ணனே தம்பியை அடித்துக்கொன்று வீட்டின் தோட்டத்தில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனை நெகிழ்ச்சியடைந்த செய்த திருகோணமலை தமிழ் இளைஞன்!!

திருகோணமலையில்..

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக வந்து தற்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் வலம் வந்துகொண்டிருக்கிறார்.இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டொக்டர், டான், மாவீரன் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகின்றனர்.இவ்வாறான நிலையில், இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு பரிசை கொடுத்துள்ளார்.

இலங்கையில் திருகோணமலையை சேர்ந்த குறித்த இளைஞன் சென்னைக்கு வருகை தந்து நடிகர் சிவகார்த்திகேயன் அலுவலகத்திற்கு சென்று அவரிடம் ஓவியம் ஒன்றை கொடுத்துள்ளார்.

குறித்த ஒவியத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை அவரின் ஆண் குழந்தையை தூக்கி வைத்திருப்பது போலவும், மேலும் அம்மா, மனைவி பெண் குழந்தை ஆராதனா என குடும்பமாக இருக்கும் புகைப்படத்தை ஓவியமாக வரைந்து அவரிடம் கொடுத்துள்ளார்.

இவ்வாறான நிலையில், இளைஞனுக்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தனது பாராட்டுக்களை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியது,”தம்பி உங்கள் ஓவியத்தை பார்த்தேன் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது, உங்களுக்கு என் அன்பும், பாராட்டுக்களும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

யாழிலிருந்து தமிழகத்திற்கு சென்று பொலிஸில் தஞ்மடைந்த தமிழ் இளைஞன்!!

யாழில்..

யாழிலிருந்து படகுமூலம் இந்தியாவுக்கு சென்ற நபரொருவர் தான் அகதி எனக்கூறி பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.யாழ். கட்டப்பிராய் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரே மேற்படி படகு மூலம் தனுஷ்கோடியில் இறங்கி அங்கிருந்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று, தான் அகதியாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் எப்போது வந்தாய் எப்படி வந்தாய் என்ன விசாரணை தொடங்கினர், பின்னர் மத்திய, மாநில உளவு பிரிவு பொலிஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியிருந்தனர்.

குறித்த விசாரணையில், குறித்த நபர் நேற்றைய தினம் (08.09.23) இரவு 11.30 மணியளவில் தலைமன்னார் கிராமத்திலிருந்து படகு மூலம் 100,000 ரூபா செலுத்தி இன்று (09-09-2023) காலை 04.30 மணியளவில் இராமேஸ்வரம் கோரண்டராமர் கடற்கரை அருகில் வந்து கரை இறங்கியுள்ளார்.

மேற்படி நபரை விசாரணை செய்ததில் குறித்த நபரின், தாய் தந்தையர் 1990 ஆம் ஆண்டு தமிழகம் வந்து வேலூர் மாவட்டம் மேல்மானேவர் அகதிகள் முகாமில் வசித்து வந்ததாகவும் 1996 ஆம் ஆண்டு தான் பிறந்ததாகவும்,10 ஆம் வகுப்பு வரை குணவட்டம் அரசு மேல்நிலைப் பாடசாலையில் பயின்று பின்பு பெயின்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.பின்பு இலங்கை கடந்த 2017 ஆம் ஆண்டு விமானம் மூலம் வந்துள்ளார்.

குறித்த நபரின் அப்பா சங்கர் 2004 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்ததாகவும் அம்மா புஷ்பலதா தம்பி பிரவின் ஆகியோர் வேலூர் மாவட்டம் மேல் மானேவர் அகதிகள் முகாமில் வசித்து வருவதாகவும் அவர்களை பார்க்க தமிழகம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து மேலதிக விசாரணை மேற்கொண்டு அவர் அகதி தான் என்று உறுதிப்படுத்திய பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்படவுள்ளார்.

இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்த தமிழ் பெண் கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழப்பு!!

கொழும்பில்..

கொழும்பு-கல்கிஸ்ஸை அடுக்குமாடி குடியிருப்பொன்றின் வீட்டில் வசித்து வந்த இங்கிலாந்து பெண் ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (09.09.2023) இடம்பெற்றுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முகப் புத்தகம் ஊடாக வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவருடன் அறிமுகமாகி பின்னர் இருவருக்கும் இடையில் காதல் உறவு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த பெண் இணையவழியில் முன்பதிவு செய்து அல்விஸ் மாவத்தையில் உள்ள அடுக்குமாடி தொகுதியில் வீடொன்றை வாடகை அடிப்படையில் பெற்று கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வந்து தங்கியிருந்துள்ளார்.

குறித்த பெண் இன்று (10.09) மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்த நிலையில், நேற்று அதிகாலை இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பெண் இவ்வாறு தவறுதலான முடிவை எடுத்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிருடன் இருக்கும் போதே மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. கணவரின் முன்விரோதம்.!!

கிருஷ்ணகிரியில்..

தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரி அருகே முன் விரோதத்தின் காரணமாக மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளாப்பள்ளியை சேர்ந்த தம்பதியினர் சேதுராம் (44) மற்றும் சுகன்யா (44).

இருவரும் ஆடிட்டராக உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு தகராறு வந்துள்ளது. இதனால், மனைவி சுகன்யா கடந்த 10 மாதங்களாக கிருஷ்ணகிரி வீரப்பன் நகர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து, கணவர் மற்றும் மனைவிக்கு இடையே விவாகரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் இவர்களது விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 4ஆம் திகதி ருஷ்ணகிரி நகர் ஆர்.சி. சர்ச் மற்றும் வேறு சில இடங்களில் சுகன்யா இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனையறிந்த சுகன்யா அதிர்ச்சியடைந்து கிருஷ்னகிரி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் அவர், தனதுகணவர் சேது ராம் முன் விரோதம் காரணமாக தனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்துள்ளார் என குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, கிருஷ்னகிரி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளின் திருமணம் நடந்த ஹொட்டல் அறையில் தூக்கில் தொங்கிய பெற்றோர்!!

கேரளாவில்..

கேரளாவின் திருவனந்தபுரத்தில் மகளின் திருமணம் நடந்த அதே ஹொட்டல் அறையில் பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரமான சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்தவர் சுகதன்(வயது 71), இவரது மனைவி சுனிலா.

இவர்களுக்கு உத்தரா என்ற மகள் இருக்கிறார், கடந்த 30 ஆண்டுகளாக மஸ்கட்டில் பணியாற்றி வந்த சுகதன் சென்னையில் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்து வரும் கடை நடத்தி வந்துள்ளார்.

தொழிலில் நஷ்டம் ஏற்படவே குடும்பத்துடன் திருவனந்தபுரம் சென்று சொந்த வீட்டில் குடியேறினார், மேலும் பணப்பிரச்சனையால் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மகள் உத்தராவின் திருமணத்தை தடபுடலாக நடத்தியுள்ளார். இதனால் கடன் தொல்லை மேலும் அதிகரிக்க மகள் திருமணம் நடத்தப்பட்ட அதே ஹொட்டலில் அறை எடுத்து சுகதன்- சுசிலா தங்கினர்.

நேற்று மதியம் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் அறைக்கு சென்றுள்ளனர், மாலை அறையை சுத்தம் செய்வதற்காக ஊழியர் வந்த போது கதவை நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளனர். சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை திறந்து பார்த்த போது, ஒரே துப்பட்டாவில் இருவரும் தூக்குப்போட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர்.

உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, விரைந்து வந்த அதிகாரிகள் இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்ததுடன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

“30 வயது வரை மட்டுமே வாழ வேண்டும் என முடிவெடுத்திருந்தேன்” : தற்கொலை செய்துகொண்டவரின் அதிரவைக்கும் கடிதம்!!

மத்தியப் பிரதேசத்தில்..

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் தீன்தயாள் நகரைச் சேர்ந்தவர் ஆதித்ய ஷர்மா(30). ஹோட்டல் நடத்திவந்த இவர் திடீரென நேற்று துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பான தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது. மேலும், அவரது அறை முழுவதும் ஒட்டப்பட்டிருந்த தற்கொலை குறிப்புகளையும் கைப்பற்றியிருக்கிறது.

அதில், “தற்போது எனக்கு 30 வயது 8 மாதம் ஆகிறது. 8 வருடங்களுக்கு முன்பே 30 வயதுவரை மட்டுமே வாழ வேண்டும் எனத் தீர்க்கமாக முடிவெடுத்திருந்தேன். எனது தற்கொலை தாமதமானதற்கு என்னுடைய அம்மாதான் காரணம். எனக்குப் பிறகு அவர்களை யார் பார்த்துக்கொள்வார் என்ற பரிதவிப்பு இருந்தது.

இப்போது என்னுடைய தாயைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை என் நண்பர்களிடம் விட்டுச் செல்கிறேன். எனது தற்கொலைக்கு என் நண்பர்கள், உறவினர்கள் என யாரும் காரணமல்ல.

எனக்குக் கடன் உள்ளிட்ட எந்தப் பிரச்னையும் கிடையாது. நன்றாகவே வாழ்ந்தேன். அம்மாவுக்கும், எனது நண்பர்களுக்கும் முன்னால் இறந்துவிட வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.

அவர்களின் மரணத்தைப் பார்க்கும் சக்தி எனக்குக் கிடையாது. ‘அம்மா என் மரணத்துக்காக என் நண்பர்களைத் திட்டாதீர்கள். அவர்களுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’. நான் சித்து மூஸ்வாலாவின் தீவிர ரசிகன்.

நான் தற்கொலை செய்துகொள்ளப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி 2016-ம் ஆண்டு ஒருவரிடம் எனது தற்காப்புக்காக வாங்கியது. இப்போது அவரும் என்னைப்போல உயிரோடு இல்லை. இதுவரை இந்த துப்பாக்கியைத் தவறாகப் பயன்படுத்தியதில்லை.

எனது இறுதிச்சடங்கை என்னுடைய நண்பர்கள் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். இதை காவல்துறை அதிகாரிகளிடம் சிறப்புக் கோரிக்கையாகவே தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தத் தற்கொலை குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி, “தற்கொலை குறிப்பைப் பார்க்கும்போது அவருக்கு மனநலப் பிரச்னை இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. அவரின் மரணம் தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

குளத்தில் மூழ்கி சிறுமி பலி : 2 பேரின் உயிரைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்!!

திருச்சியில்..

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 12 வயது சிறுமி குளத்தில் மூழ்கி பலியான நிலையில், நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வையம்பட்டி அருகேயுள்ள கடப்பமரத்துப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகள் விஸ்வஜோதி (12). இவர் என்.பூலாம்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவந்தார்.

இவர் தன் சகோதரி மகரஜோதி, தேவதர்சினி, ரவி பிரகாஷ் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து, வீட்டுக்கு எதிரே இருந்த முத்தாளம்மன் குளத்தில் குளித்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். விளையாடிய உற்சாகத்தில் சிறுமி விஸ்வஜோதி உள்ளிட்ட நான்கு பேரும், ஆழமான பகுதியில் மூழ்கி தத்தளித்திருக்கின்றனர்.

அப்போது அந்தக் குளத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்த அதே ஊரைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படித்துவரும் சபரீஸ்வரன்(13) என்ற சிறுவன், நீரில் இறங்கி நால்வரையும் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார்.

அந்தவகையில், குளத்தில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ரவி பிரகாஷ், தேவதர்சினி ஆகிய இருவரின் தலைமுடியைப் பிடித்து குளத்திலிருந்து வெளியே இழுத்துவந்து அவர்களின் உயிரைக் காப்பாற்றினார்.

மகரஜோதி என்ற சிறுமி தானாகவே போராடி குளத்தினுடைய கரைக்கு வந்திருக்கிறார். இதில் விஸ்வஜோதி மட்டும் நீரில் மூழ்கிய நிலையில் மாயமானார். அதையடுத்து, உயிர்பிழைந்த குழந்தைகளின் அழுகுரல் கேட்டு சாலையில் சென்றவர்கள், ஊர் பொதுமக்கள் எனப் பலரும் ஓடிவந்தனர்.

அதில் சிலர் குளத்தில் இறங்கித் தேட, சில நிமிடங்களுக்குப் பிறகு விஸ்வஜோதி சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வையம்பட்டி போலீஸார், சிறுமி விஸ்வஜோதியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், வழக்கு பதிவுசெய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவத்தில் சரியான நேரத்தில் சாதுர்யமாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டு இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன் சபரீஸ்வரனின் செயலை ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

ஆனால், தன்னுடைய கண் முன்னாலேயே நீரில் தத்தளித்த விஸ்வஜோதியைக் காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்து சிறுவன் சபரீஸ்வரன் தேம்பியழுதது, அங்கிருந்த பொதுமக்களையே கலங்கவைத்தது.

உயிரிழந்த சிறுமி விஸ்வஜோதியின் தந்தை மலைச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன நிலையில், தாய் உஷா கட்டட வேலைக்குச் சென்றுவந்திருக்கிறார். இந்த நிலையில், பாட்டி வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்குச் சென்றுவந்த சிறுமி விஸ்வஜோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வவுனியாவில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த சோகம்!!

வவுனியாவில்..

வவுனியாவில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவமானது வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதி விளக்கு வைத்தகுளத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வவுனியாவில் இருந்து புளியங்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மேலும் இவ் விபத்தில் கண்டியை சேர்ந்தவரும் புளியங்குளம் பொலிஸ் கான்ஸ்டபிளுமான 55 வயதுடைய கருணாதிலக்க என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் உள்ள விடுதியில் இளம் யுவதிக்கு நால்வரால் நேர்ந்த கொடூரம்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதியொன்றில் 26 வயதான இளம் யுவதி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் யுவதியை போதைக்கு அடிமையாக்கி குறித்த மூன்று நபர்கள் கூட்டு பாலுறவு கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ் நகரில் சிறுவர்களை இலக்கு வைத்து ஜஸ் போதைக்கும் அடிமைப்படுத்தும் வலையமைப்பை தேடி சென்ற பொலிஸாரிடம் இவர்கள் சிக்கியுள்ளனர்.குறித்த நான்கு பேரும் நேற்றையதினம் (08-09-2023) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதான 26 வயது யுவதி திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணி புரிகின்றார்.

யாழ் நகருக்கு அருமையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று குறித்த் விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டபோது அறையொன்றில் யுவதியும் ஆணொருவரும் தங்கி இருந்துள்ளனர்.ஏனைய 2 ஆண்களும் அறைக்கு வெளியில் இருந்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ஜஸ் போதைப்பொருட்களும் கைப்பற்றப்படட்து. 26- 29 வயத்திற்கிடைப்படட 3 ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் இயற்கைக்கு மாறான பாலுறவை கொண்டுள்ளமை விசாரனைகளிலும் மருத்துவ பரிசோதனைகளிலும் தெரியவந்துள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்ட 4 பேரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.