சிறுபான்மை இனத்தலைவர் உட்பட ஐ.எஸ்.தாக்குதலில் மேலும் 26 பேர் உயிரிழப்பு! 50 பேர் காயம்! நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!!

275
7045
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய இரட்டை கார் குண்டு வெடிப்பில் சிறுபான்மை யின் தலைவர் உட்பட 26 பேர் பலியாகியுள்ளனர்.
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற் றும் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக ஸ்வைதா நகரில் டிரூஸ் என்னும் சிறுபான்மையினர் போராடி வருகின்றனர். சிரியாவில் மட்டும் 5 இலட்சம் டிரூஸ் இனத்தவர் வசிக் கின்றனர்.
இந்த இனத்தின் தலைவர் களில் ஷேக் வாஹித் அல்பலோஸ் பலம் வாய்ந்தவர் ஆவார். தனது இனத்துக்கென்று ஒரு போராளிக் குழுவை உருவாக்கி இவர் ஸ்வைதா நகரின் பெரும்பகுதியை கட்டுப்பாட் டுக்குள் வைத்திருந்தார்.
இவரைக் கொல்வதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பலமுறை முயற்சி மேற்கொண்டனர். எனினும் அது பலிக்கவில்லை.இந்த நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை ஸ்வைதா நகருக்கு வெளியே அல்பலோஸ் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவருடைய காரில் தீவிரவாதிகள் மறைத்து வைத்தி ருந்த குண்டு வெடித்தது. இதில் அல்பலோசும் அவருடன் சென்ற வர்களும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே சிரியாவின் தகிர் அல்ஜபால் நகரில் ஒரு வைத்திய சாலை அருகே வீதியோரம் நிறு த்தி வைக்கப்பட்டு இருந்த காரு க்குள் தீவிரவாதிகள் வைத்த குண ;டுகள் வெடித்தன.அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த னர்.
இந்த 2 கார் குண்டுகள் வெடிப்பு தாக்குதல்களிலும் மொத்தம் 26 பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந் தாகவும் சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பு மையத் தின் தலைவர் ரமி அப்துல் ரஹ் மான் தெரிவித்துள்ளார்.
தங்களது தலைவர் கொல்லப்பட் டதால் ஆத்திரமடைந்த டிரூஸ் இனத்தவர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு ஸ்வைதா நகரில் அரசு அலுவலங்கள் முன்பாக ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சில இடங் களில் அரசு அலுவலங்கள் சூறை யாடப்பட்டன.நகரில் நிறுவப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ஹபீஸ் அல் ஆசாத் தின்(தற்போதைய ஜனாதிபதியின் தந்தை) சிலையையும் அவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
2 கார் குண்டு வெடிப்புச் சம்ப வங்களுக்கும் இதுவரை எந்த தீவிரவாத அமைப் பும் பொறுப்பு ஏற்க வில்லை. எனினும், ஐ.எஸ். தீவிர வாதி கள்தான் இந்த தாக்குதல் களின் பின்னணியில் இருக்க வேண்டும் என்று சிரியா அரசாங்கம் சந் தேகிக்கிறது.