கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மனைவியும் குழந்தையும் ஆற்றில் விழுந்து பலி!!

612

river

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மனைவியும் குழந்தையும் ஆற்றில் விழுந்து பலியாகியுள்ளனர். அரலகங்வில பிரதேசத்தில் உள்ள இஸட் டி மகாவலி கிளையாற்றில் விழுந்து தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

மதுங்கல பிரதேசத்தில் இருந்து கணவருடன் இந்த பெண்ணும் இரண்டு வயது குழந்தையும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மெதகம 8 ஆம் மைல்கல் அருகில் மோட்டார் சைக்கிள் ஆற்றில் விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

32 வயதான பெண்ணும் குழந்தையுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற போது கணவர் மதுபோதையில் இருந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.