
பெண் ஒருவர் இரண்டு பொலிசார் மற்றும் அவர்களது நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
அப்பெண் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட பின் அவரிடமிருந்து பணம் ஏடிஎம் அட்டை ஆகியவற்றை அந்த கும்பல் கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது.
இன்று காலை அப்பெண் அளித்த புகாரின் பேரில் பொலிசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என்பது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் வசித்த அதே குடியிருப்பில் தான் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவன் வசித்துவந்துள்ளான்.
பொலிஸில் சேர முயற்சித்துக்கொடிருந்த அந்த நபர் தன்னுடைய பொலிஸ் நண்பர்கள் இரண்டுபேரையும் மற்றொரு நண்பரையும் இப்பெண்ணின் வீட்டிற்கு அழைத்து இக்கொடுமையை செய்துள்ளான்.
இக்கும்பல் அப்பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதை அவருடைய உடைமைகளை திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானதை அடுத்து பொலிசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





