தொலைக்காட்சி பார்ப்பத்தில் தம்பியுடன் தகறாது : 11 வயது சிறுமி தற்கொலை!!

637

sis and bro

தொலைக்காட்சி பார்ப்பதில் தம்பியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 11 வயது சிறுமி ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் பெங்களூர் காடுகோடி சாதரமங்களாவை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் நவநீதா (வயது 11). இவள் அதே பகுதியில் உள்ள பாடசாலையில் 5ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று முன்தினம் தொலைக்காட்சி பார்ப்பது தொடர்பாக நவனீதாவுக்கும், அவரது தம்பிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நவநீதா வீட்டின் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.

அதன் பின்னர் நீண்டநேரமாக அவள் வெளியே வரவில்லை. இதனால் இரவு 10 மணியளவில் தனது மகளை சாப்பிடுவதற்காக பெற்றோர் கூப்பிட்டும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அங்கு நவநீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதார்கள். இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.