வவுனியாவில் குளத்தில் மூழ்கி சிறுமி பலி!!

684

vavuniya

வவுனியா கலாபோவஸ்வௌ பகுதியில் வசிக்கும் அகிம்சா நிலிமினி வயது 12 என்ற சிறுமியே குளத்தில் மூழ்கி பலியாகியுள்ளார். இது பற்றி மேலும் தெரியவருவதாவது..

நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா அட்டபகஸ்கட குளத்திற்கு நீராடுவதற்காக மூன்று சிறுமிகள் சென்றுள்ளனர். இவர்களுள் அகிம்சா நிலிமினி என்ற சிறுமி, கடந்த வறட்சி காலத்தில் விவசாயத்திற்கு நீர் பெறுவதற்காக அட்டபகஸ்கட குளத்தில் வெட்டப்பட்ட பாரிய குழிக்குள் தவறுதலாக வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இச் சிறுமியுடன் நீராடுவதற்கு சென்ற இரண்டு சிறுமிகளும் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வவுனியா கலாபோவஸ்வௌ குளத்தில் நீர் வற்றியதன் காரணத்தினால் இம் மூன்று சிறுமிகளும் அட்டபகஸ்கட குளத்திற்கு குளிப்பதற்காக சென்ற வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.