வவுனியா கோவில்குளத்தில் நடைபெற்ற பயிர்ச் சிகிச்சை முகாம்!!

590

vavuniyaவவுனியா, கோவில்குளம் கமநலகேந்திர நிலையத்தில் விவசாயிகளுக்கான பயிர்ச் சிகிச்சை முகாம் கடந்த 17ம் திகதி மேற்கொள்ளப்பட்டது. பெருமளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு தாம் பயிர்ச் செய்கையில் எதிர்நோக்கும் நோய்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் சார் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

இவ் நிகழ்வை நடத்திய வவுனியா விவசாய திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சகிலாபானு தெரிவிக்கையில்..

வவுனியா மாவட்ட விவசாயிகளின் பயிர்ச் செய்கை தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து அவர்களது உற்பத்தியை ஊக்கிவிக்கும் நோக்கில் பயிர்ச் செய்கை முகாம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நோய் தாக்கங்கள் காராணமாக அவர்களது விளைச்சலின் அளவும் குறைவடைந்து அதை நம்பி வாழும் குடும்பங்களின் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது.

இப் பிரச்சனைகளை இலகுவாக தீர்க்கும் பொருட்டு மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை தொடக்கம் எமது பகுதியில் உள்ள 10 விவசாய போதனாசிரியர் பிரிவுகளிலும் தொடர்ச்சியாக இந்த பயிர்ச் செய்கை முகாமினை நடத்தி வருகின்றோம் எனத் தெரிவித்தார்.