தேநீர் போட்டுக்கொண்டிருந்த தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த பயங்கரம்!!

481

தமிழகத்தில் தந்தை- மகள் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ராமலிங்கா புரத்தில் டீக்கடை வைத்திருப்பவர் செல்வராஜ் (45), இவருக்கு 9 வயதில் அபிராமி என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் இவர் இன்று வழக்கம் போல தனது டீக்கடையை திறந்து அன்றாட பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த அம்பாஸ்டர் கார் ஒன்று அவரின் கடைக்குள் புகுந்ததால், செல்வராஜ் மற்றும் அபிராமி அந்த இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்தியது ரமேஷ் தான் எனவும், அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அவன் ஓடி விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள், ரமேஷ் இந்த ஊரைத் தான் சேர்ந்தவர். ரமேஷுக்கும் செல்வராஜுக்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இதனால் ரமேசை செல்வராஜ் அதிகம் தொந்தரவு செய்தார், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினர் கண்டு கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் செல்வராஜ் தனது மனைவி குழந்தைகளோடு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

இதை அறிந்த எஸ்.பி. உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து செல்வராஜ் போராடி வந்த நிலையில், இன்று ரமேஷ் அவரை காரை ஏற்றி கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தை அறிந்த பொலிசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.