கணவனுக்காக பெற்ற குழந்தையை விற்ற தாய் : மனைவி சொன்ன கண்ணீர் காரணம்!!

591

 
இந்தியாவில் கணவனின் மருத்துவ செலவுக்காக பெற்ற குழந்தையை அவரது மனைவி விற்றுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் Bareilly பகுதியைச் சேர்ந்தவர் Sanju, இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

இவருக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் தற்போது தனக்கு பிறந்த மூன்றாவது குழந்தையை குழந்தையில்லா தம்பதிக்கு கடந்த டிசம்பர் மாதம் 29-ஆம் திகதி ரூபாய் 42,000-க்கு விற்றுள்ளார்.

இது குறித்து Sanju கூறுகையில், தனது கணவனின் சிகிச்சைக்காக குழந்தையை விற்றதாக கூறியுள்ளார். வீட்டு வேலை செய்து கொண்டிருந்த போது, தனது கணவன் மீது சுவர் விழுந்துவிட்டது, இதனால் அவரின் பின் பகுது முதுகெலும்பு உடைந்துவிட்டது. இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்ததால் நான் என்னுடைய நகைகள் மற்றும் சேமிப்பு கணக்கில் இருந்த அனைத்தையும் விற்று சிகிச்சை மேற்கொண்டுவிட்டேன்.

தற்போது அவரது உடல்நிலை சரியாக வேண்டும் என்றால் மருத்துவர்கள் டெல்லிக்கு கொண்டு செல்லும் படி கூறினர். இதற்கே பணம் இல்லை, டெல்லி சென்று எப்படி சிகிச்சைக்கு பணம் புரட்டுவது என்று தெரியாமல் இருந்த காரணத்தினால் தனது மூன்றாவது குழந்தையை விற்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் குழந்தை விற்கும் திட்டத்தை அவரது கணவர் Harswarup Maurya தான் Sanju-வுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த தம்பதிகள் குழந்தையை யாருக்கு விற்றார்கள் என்பது குறித்து தெரிவிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.